மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் வைரஸால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 700 நெருங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்…!
இந்நிலையில் மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறும்போது “கடந்த சில நாட்களில் நாடெங்கும் டேட்டா பயன்பாடு 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. டேட்டா பயன்பாடு அதிகரிப்பால் செல்போன் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான சுமை அதிகரித்துள்ளது. இதனால் இணையதள வேகம் குறைந்துள்ளது. இதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் கல்வி, பணப்பட்டுவாடா, ஆன்லைன் மருத்துவ சேவைகள் போன்ற முக்கியமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM